Canada

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 68-வயது நபர் கைது!

 

எட்மன்டன் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 68-வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

RCMP தகவலின் படி, எட்மன்டன் பஸ்லைன் சாலை பகுதியில் சரியாக 3:30 க்குப் பின்னர் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் நபர் ஒருவரால் குறித்த வெடி குண்டு மிரட்டல் விடப்பட்டது.

எனவே, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, , அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் உள்ளிட்ட குறித்த குற்றச்சாட்டில் எட்மண்டனின் ஜார்ஜ் லூயிஸ் ராய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீதிமன்றத்தில் வருகிற மே 8-ம் தேதி நீதிமன்றத்தின் முன்பு தோன்ற இருக்கிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top