News

6 குழந்தைகளுடன் வெவ்வேறு இடங்களில் சடலமாக கண்டெடுப்பட்ட பெண்கள்!

 

அமெரிக்காவில் 6 வளர்ப்பு குழந்தைகளுடன் இரண்டு பெண்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் மற்றும் சாரா ஹார்ட் என்கிற 38 வயதான இரண்டு பெண்கள், 6 சிறுவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அந்த சிறுவர்கள் 6 பேருமே 12 வயதிற்குட்பட்டவர்கள்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த சிறார்களுக்கு சரியான உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்வதாக பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அடுத்த 3 நாட்களில் சாரா குழந்தைகளுடன் மாயமாகியுள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்திய பொழுது, Mendocino பகுதியில் உள்ள மலை அருகே 19 வயதான மார்க்கிஸ் மற்றும் 14 வயதான எரேமியா மற்றும் அபிகாயில் ஆகியோரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சில வாரங்களுக்குப் பின்னர் 12 வயதான சியராவின் உடல் பசுபிக் பெருங்கடல் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய உடல் அதிகம் சிதைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவித்தன. இது பொலிஸாருக்கு வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

6 வயதான ஹன்னாவின் உடல் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில், குடும்பத்தின் ஆறாவது குழந்தையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

 

இதில் கண்டுபிடிக்கப்படாத டெவோனே ஹார்ட் (15) 2014ம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் மல்க ஒரு பொலிசாரை கட்டியணைத்தான். இந்த புகைப்படமானது அந்த சமயம் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சம்மந்தமான விசாரணையை தாமஸ் ஆல்மேன் என்பவர் மேற்கொண்டு வந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று முடிந்த பின்னர் பேசிய அவர், விசாரணை ஆரம்பித்த 3 நாட்களில் குழந்தைகளை காரில் ஏற்றிக்கொண்டு ஜெனிஃபர் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

குழந்தைகள் 6 பேரையும் அவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கின்றோம். பிரேத பரிசோதனையில், ஜெனிஃபர் உடலில் மது கலந்திருபப்து கண்டுபிடிக்கப்பட்டது. சாரா மற்றும் 3 குழந்தைகளின் உடலில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் கண்டுடிபிக்கப்பட்டன. இதிலிருந்தே இது ஒரு கொலை என முடிவு செய்துள்ளோம்.

சம்பவம் நடந்த பொழுது, ஜெனிஃபரை தவிர மற்ற அனைவரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.  அவர்களை கொன்றுவிட்டு ஜெனிஃபர் தற்கொலை செய்துள்ளார் என வழக்கை முடித்திருப்பதாக கூறியுள்ளார்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top