Canada

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டார்!

 

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான 24-வயதுடைய நபர் (Matthew Ruscitti) என்று பொலிஸார் முன்னிலையில் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

குறித்த, துப்பாக்கி சூடு சம்பவம் பள்ளத்தாக்கு பண்ணை வீதி, எஸ்ப்ளனாடே அருகே, ஏறக்குறைய சுமார் 6:30 மணி அளவில், பிக்கிங் ரிக்ரேஷன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இதில், துப்பாக்கி சூடு இலக்கான காயங்களுடன் வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில், குறித்த நபர் 24-வயதுடைய (Matthew Ruscitti) என்று பொலிஸார் முன்னிலையில் அடையாலம் காட்டப்பட்டுள்ளார்.

இந்த 2019 ஆம் ஆண்டின் மூன்றாவது கொலை சம்பவம் (Pickering recreation centre) பகுதியில் ஏப்ரல் 7 இடம் பெற்றுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top