Canada

கனடா வந்த இந்திய குடும்பம், நீச்சல் குளத்தில் உயிரிழந்த பரிதாபம்!

 

இந்தியாவிலிருந்து கனடா வந்த குடும்ப உறுப்பினர்கள் நீச்சல் குளத்தில் நீந்தும் வேளையில் தந்தை உயிரிழக்க, அவரின் இரண்டு மகன்களும் மருத்துவமனையில் சிகிசையில் உள்ளனர்.

குறித்த சம்பவத்தில், ஞாயிற்றுக்கிழமை வின்னிபெக்கிலுள்ள தங்கள் அடுக்கு மாடிக்குடியிருப்பில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் Ram, Shreyaan மற்றும் Aaram ஆகியோர் பேச்சு மூச்சற்றுக் கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் அவசர உதவியை அழைக்க, மூவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள், சுமார் ஓராண்டுக்கும் முன் இந்தியாவிலிருந்து கனடா வந்தவர் Ram Nivash Misra (38). சில மாதங்களுக்கு முன், அவரது மனைவியும் மகன்கள் Shreyaan மற்றும் Aaram ஆகியோரும் கனடா வந்து Ram உடன் இணைந்து கொண்டனர்.

இதில், சிகிச்சை பலனின்றி திங்களன்று Ram மருத்துவமனையில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவரது மகன் Aaram மற்றும் Shreyaan மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வருவோர் முறையான நீச்சல் பயிற்சி இன்றி நீச்சல் குளங்களில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி வருவதாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top