ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் – பாகிஸ்தான் வீரர்கள் மூவர் பலி

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான வசிரிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
அவ்வகையில், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள அல்வாரா என்ற இடத்தில் இன்று சுமார் 70 தலிபான் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
சில பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.