News

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு நாடெங்கும் கண்ணீருடன் அஞ்சலி! 

கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிறு பயங்கவாதக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தாக்குதலுக்கு இலக்காகிய தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அத்துடன் பல்வேறு மத தலங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

 

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி தடாகத்தில் மலர்களைத்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

வடக்கு மாகாணத்தில் இன்று காலை ஆலய மணிகள் ஒலிக்கச் செய்யப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆலயங்களில் சறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.

 

Latest News

To Top