உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சவூதி அரேபியாவிற்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்

உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் சவூதி அரேபியாவிற்கு தொடர்பு உண்டு என வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தினை சவூதி அரேபியா மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது அல்லது ஏதோ ஓர் வகையில் தாக்குதலுடன் தொடர்பு உண்டு என லெபனானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் அப்துல் அஸீஸ் அல் அஸாப், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவர் அப்துல் நாசீர் அல் ஹார்நெத்திவிற்கு அவசர இரகசிய கடிதமொன்றை அனுப்பி வைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர், தூதுவருக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல்கள் முதலாவது: நீங்கள் அனைத்து ஆவணங்களை அழிக்க வேண்டும். கணனித் தகவல்களை அழிக்க வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு குழுக்களுடன் அண்மையில் பேணி கடிதத் தொடர்புகள் அனைத்தையும் அழிக்கவும்.
இரண்டாவது: சவூதி அரேபியாவிற்கான கொன்சோலர்கள், பாதுகாப்புப் படையினர், புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறிப்பாக ஈஸ்டர் தினமன்று பொது மக்கள் கூடும் இடங்கள் குறிப்பாக தேவாலயங்களுக்கு அருகாமையில் செல்லக் கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
மூன்றாவது: இலங்கை அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் நிலைப்பாடுகள் குறித்து அடிக்கடி எமக்கு தகவல்களை வழங்க வேண்டும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, இந்த கடிதம் தொடர்பில் சவூதி அரசாங்கமோ அல்லது தூதரகமோ இதுவரையில் பதில்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.