News

எதிர்க்கட்சியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி: வெனிசுவேலா ஜனாதிபதி அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் கெய்டோவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட தொலைக்காட்சி உரையில், இராணுவத்தை தனக்கு எதிராக திசைத்திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் தோல்வி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், மதுரோ ஆயத படையின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமது ஆதரவாளர்களை இன்று மீண்டும் வீதியில் இறங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மதுரோ அரசாங்கமே காரணம் என சுட்டிக்காட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தன்னை இடைக்கால ஜனாதிபதியாகவும் அறிவித்துக் கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவரின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 50 நாடுகள் வரவேற்றன. ஆனால், ரஷ்யா, சீனா மற்றும் நாட்டின் உயர்மட்ட இராணுவம் என்பன தொடர்ந்தும் ஜனாதிபதி மதுரோவை ஆதரித்து வருவதுடன், போட்டியாளரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top