Canada

ஒட்டாவாவில் பயணிகளிற்கு தடை! மீறினால் $ 5,000 அபராதம்!

 

கனடாவில் ஒட்டாவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கியூபெக், ஒன்டாரியோ மற்றும் நியூ பிரன்ஸ்விக் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், குறித்த பகுதியில் நபர் ஒருவர் வெள்ள பெருக்கு மத்தியிலும் சவாரி மேற்கொண்டு வருகிறார்.  இதையடுத்து, ஒன்டாரியோ-கியூபெக் எல்லைக்கு அருகே ஒட்டாவா ஆற்றுப் பகுதியில் படகுகள் செல்ல தடை செய்யப்பட்டதோடு $ 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் வெள்ள பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top