கனடாவில் அபார்ட்மெண்ட் ஒன்றில் கடும் தீ விபத்து – சுமார் 40-பேர் வெளியேற்றம்!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட கடும் தீ விபத்தின் காரணமாக சுமார் 40-பேர் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
குறித்த தீ விபத்து, கனடாவில் வட வான்கூவர் அபார்ட்மெண்ட் பகுதியின் மூன்றாவது மாடியில் நேற்று காலை இடம் பெற்று ள்ளது. இதையடுத்து, குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
இதில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30 தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.
இதில், வீடுகள் அதிக அளவு சேதம் அடைந்த நிலையில், எந்த விதமான உயிர் சேதம் ஏற்பட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.