Canada

கனடாவில் இளம் பெண்னை மோசமாக தாக்கி கொள்ளையிட்ட நபர் கைது!

 

கனடாவில் இளம் பெண் ஒருவரை மோசமாக தாக்கி கொள்ளையிட்ட நபரை லண்டன் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில், கைது செய்யப்பட்ட குறித்த நபர் 37, வயதுடைய (Omar Oneil Williams) ஓமர் ஒன்ல் வில்லியம்ஸ் என்று அடையலாம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த, பெண் வாகனத்தில் செல்ல முற்பட்ட போது தாக்கப்பட்டார். இதில், அவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில், குறித்த நபர் கடந்த ஏப்ரல் 15 அன்று சிமோய் வீதிக்கு அருகில் வெலிங்டன் தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த நபரை லண்டன் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்பு விசாரணையின் அடிப்படையில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில், குறித்த நபர் மீது லண்டன் பொலிஸார் ஆயுதம் தாக்குதல், கொள்ளை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top