கனடாவில் சகோதரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 19-வயது நபர் கைது!

கனடாவில் சகோதரர் ஒருவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, துப்பாக்கி சூடு நடத்திய 19-வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் தென்கிழக்கு செயிண்ட் தாமஸ் பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட குறித்த நபர் தன்னுடைய சகோதரருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை படுக்கை அறையில் வைத்து நான்கு முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் உச்சகத்தை எட்டிய நிலையில், குறித்த துப்பாக்கி மேற்கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து, குறித்த நபரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றபட்டதோடு, அவரை பொலிஸார் கைது செய்தனர்.