Canada

கனடாவில் நபர் ஒருவரை கொலை செய்த பெண் கைது!

 

கனடாவின், கல்கரி பகுதியில் 40-வயது நபரின் கொலை தொடர்பில் இரண்டாவது கொலை குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி கல்கரி பகுதிக்கு விரைந்து வந்து பார்த்த போது அதில், 40-வயதுடைய நபர் அதிக காயங்களுடன் காணப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு அனுமதிக்க கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், குறித்த கொலை தொடர்பில் 50-வயதுடைய ராபர்ட் லின் வொல்ஃப் சில்ட் (Roberta Lynn Wolfchild,) பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்கிறார். இதையடுத்து, குறித்த பெண் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை படுத்த இருக்கும் நிலையில் அவருக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

குறித்த கொலை சம்பவம்,கனடாவின் வடகிழக்கு கல்கரி பகுதியில் 4900 தொகுதியில் அவரது வீட்டில் இரவு வேளையில் அரங்கேறியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top