கனடாவின் மாண்ட்ரீல் விடுதியில் இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில், துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் 46-வயதுடைய சால்வட்டோர் ஸ்கோப்பா என்று பொலிஸார் அடையாளம் கண்ட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு , நேற்று நள்ளிரவில் இடம்பெற்றிருந்த நிலையில் இதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மருத்துவமணையில் அவருக்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துளா பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.