Canada

கனடாவில் மாயமான 4-வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்பு!

கனடாவின், செயின்ட் தெரசா பாயிண்ட் நேஷன் பகுதியில் வைத்து மாயமான 4-வயது சிறுவன் ஒருவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

RCMP விசாரணையில், குறித்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் வைத்து மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியின் நீண்ட தேடுதலுக்கு பிறகு சிறுவன் இரவு வேளையில் சரியாக 11:30- மணியளவில் கண்டெடுக்கப்பட்டார்.

இதில், அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

Latest News

To Top