Canada

கனடாவில் வயதான பெண்னை மோதிவிட்டு சென்ற சாரதிக்கு பொலிஸார் வலைவீச்சு!

 

கனடாவின் மிசிசாகா பகுதியில், வயதான பெண்னொருவரை மோதிச் சென்ற சாரதியை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அவர், குறித்த முதியவரை வெள்ளை நிற ஃபோர்ட் பிக்கப் வாகனம் ஒன்றினால் மோதிவிட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து, எங்லிங்டன் அவனியூ மற்றும் ஹூரோன்டாரியோ வீதி பகுதியில், சொரென்டோ ட்ரைவ் மற்றும் எளியா அவனியூ வீதிச் சந்திப்பில், நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் சம்பவித்துள்ளது.

குறித்த அந்தப் பெண் எளியா அவனியூவின் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி நடந்து சென்ற போது, அந்த வழியே வந்து வலதுபக்கமாக திரும்பிய வாகனத்தினால் மோதுண்டுள்ளார்.

சம்பவ இடத்தில் சுய நினைவற்ற நிலையில் காணப்பட்ட அவர், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து, விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து கிடைத்த கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம், 2018ஆம் ஆண்டு தயாரிப்பான வெள்ளை நிற ஃபோர்ட் பிக்கப் எனவும், அதன் பதிவு இலக்கம் AV27643 என்றும் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இவ்விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இவ்வாறு மோதிவிட்டுத் தப்பிச் சென்ற நான்காவது சம்பவம் இது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top