கனடாவில் 17-வயது சிறுவனின் தாக்குதலில் இரண்டு பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கனடா பள்ளியில் இடம்பெற்ற 17-வயது சிறுவனின் தாக்குதல் காரணமாக, இரண்டு மாணவர்கள் அதிக காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பள்ளி நிர்வாகம் தலைமையில் நயாகரா பிராந்திய பொலிஸாருக்கு தகவல் வழக்கப்பட்டது. இதில், தகவல் அறிந்து வெல்லந்தில் உள்ள நோட்ரே டேம் பள்ளி வளாகம் வந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்புடைய 17-வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு உள்ளான 17-வயது சிறுவன் மற்றும் 15-வயது சிறுவன் ஆகியோர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.