News

கனடா – இலங்கை முதலீட்டாளர்களின் சுற்றுளாத்தள வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு

கனடா – இலங்கை முதலீட்டாளர்களின் கூட்டில் முல்லைத்தீவு சிலாவத்தை தெற்கு தியோநகர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சுற்றுலா தள வளாகத்தில் ஆயுதங்கள் மற்றும் ஒருதொகுதி உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

குறித்த பகுதியில் நேற்று படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது தொலைபேசி சிம், கத்தி, தொலைநோக்கி கருவி, தொலைத்தொடர்பு கருவிகள்,சப்பாத்து, சீருடை என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

மீட்கப்பட்ட பொருட்கள் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படையினர் குறிப்பிட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பாக படையினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top