கனடா கல்கரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவருர் படு காயம்.

கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூடு, சம்பவம் ரிவர்ஃப்ரண்ட் அவென்யூ மற்றும் 4 வது அவென்யூ தென்கிழக்கு பகுதியில் நேற்று மாலை நேரத்தில் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, குறித்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் பொலிஸார் வருவதற்கு முன்பு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள கால்கரி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியின் சாலைகள் விசாரணை அடிப்படையில் மூடப்பட்டன.