கனடா கல்கரி பகுதி கோரா விபத்தில் சிக்கி வாகன சாரதி உயிரிழப்பு!

கனடாவின் கல்கரி பகுதியில், இடம்பெற்ற கோரா விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகன மோதல், கனடாவின் கல்கரி ரேஞ்ச் ரோட் 194 மற்றும் டவுன்ஷிப் ரோடு 231A, பகுதியில் சுமார் 11:23 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்து, அதி வேகத்தில் விரைந்த வந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் நிகழ்ந்துள்ளது. இதில், 34-வயதுடைய பார்த்தசாரதி காயமுற்ற நிலையில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த நபர் தொடர்பில் பெயர் எதுவும் வெளியிடப்படவில்லை.மேலும், இந்த விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.