Canada

காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க உதவிய மக்களுக்கு பொலிஸார் நன்றி!

 தண்டர் பேயில் காணமல் போயிருந்த பெண்ணை கண்டுபிடிக்க உதவிய மக்களுக்கு தண்டர் பே பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

கத்ரீனா என்ற பெண், நகரின் மேற்குப் பகுதியில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை தீவிரமாக தேடிவந்த பொலிஸார், அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை அவர்கள் உறுதியும் செய்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பெண்ணை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்கு நன்றி என தண்டர் பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் குறித்த மேலதிக தகவல் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top