Canada

கியூபெக் ஆயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள் வீடு திரும்ப அனுமதி!

 

கியூபெக் நகரில் ஆயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள் திரும்பவும் தங்களது வீட்டிற்கு செல்ல அனுமதி வழக்கப்பட்டது. குறித்த மாண்ட்ரீயல் புறநகர்ப் பகுதி வழியாக படி படியாக தண்ணீர் ஓட்டம் குறைக்கப்படுவதால், இந்த   தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கியூபெக் முழுவதும் வெள்ளக்காடாகியுள்ளது.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கனேடிய படையினர் சுமார் 200 பேர்வரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறுகள் மற்றும் கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர் கொண்டனர்.  இந்நிலையில், குறித்த பகுதியில் வெள்ளம் மற்றும் தண்ணீர் ஓட்டம் படிப்படியாக குறைக்கப்படுவதால், சுமார் ஆயிரக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள் திரும்ப வீட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

இதில், சுமார் 6,000 பேர் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 1,485 வீடுகளைச் சேர்ந்தவர்கள் செவ்வாயன்று வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top