பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கமைவாகவே இவ் சோதனை நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினருடன் பொலிசாரும் இணைந்து மேற்கொண்டதாக பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.பகிரதன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகப் பகுதி மற்றும் மாணவர் விடுதிகள் போன்றன சோதனை நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவானது மீண்டும் பல்கலைக் கழகம் ஆரம்பிப்பதற்கான திகதியினை வழங்காமையினால் கிழக்கு பல்கலைக்கழத்தின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லையெனவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.