India

சசிகலா சென்னை எழும்பூர் நீதிமன்றில் ஆஜராக அதிரடி உத்தரவு..

 

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 13ஆம் திகதி சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெ.ஜெ தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப்பிரிவு பதிவு செய்தது.

இந்த வழக்கில் சசிகலாவை வரும் 13ஆம் திகதி ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்து சென்னை நீதிமன்றத்தில் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top