News

நாடாளுமன்றத்தில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி! பல இரகசியங்கள் அம்பலமாகும் என பொலிஸார் தெரிவிப்பு

பயங்கரவாதி சஹ்ரான் ஹசீமினின் பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவிய குற்றச்சாட்டில் நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக செயற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் குருணாகல் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யபடப்டுள்ளார். ஜமால் டீ.ஜவுஷாட் என்பவர் 10 வருடங்களுக்கும் அதிக காலம் நாடாளுமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.

சந்தேக நபரை 3 மாத காலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு குருணாகல் விசேட பொலிஸார் நேற்று பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற்றனர். சந்தேக நபர் நாடாளுமன்ற அதிகாரியாக நாடாளுமன்றத்தினுள் சேவை செய்யும் போது பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பிரதான உறுப்பினராக செயற்பட்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நபர் நாடாளுமன்றத்தில் பணிக்காக செல்வதற்காக தற்காலிகமாக ராஜகிரியவில் தங்குமிடம் பெற்றுள்ளார். அத்துடன் அலவத்கொடயில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது தவ்ஹித் ஜமாத் அமைப்பின் நடவடிக்கைக்கு தொடர்புடைய பல ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பணி செய்து கொண்டே பயங்கரவாத அமைப்பின் பிரதானியாக செயற்பட்ட சஹ்ரானுடன் இணைந்து அமைப்பை வழிநடடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அக்குரன மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களை இணைத்து செயற்படுத்துவதற்காக அலவத்துகொடையில் அமைந்துள்ள அவரது வீட்டினை பயன்படுத்தியுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பில் இதுவரை வெளியாகாத முக்கிய தகவல்கள் பல அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

To Top