Canada

நெடுஞ்சாலை-404 ஏற்பட்ட விபத்தில் 66-வயது வயோதிபர் உயிரிழப்பு!

 

நெடுஞ்சாலை-404 பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 66-வயது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து, நெடுஞ்சாலை-404 எல்ஜி மில்ஸ் சாலையில் நேர்ந்த நிலையில் 66-வயது வயோதிபர் ஒருவர் இதில் அதிக படுகாயமடைந்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யோர்க் பிராந்தியம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top