Business

பராகுவேயில் கனமழை, வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு : சுமார் 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பராகுவே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சுமார் 40,000 மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

தலைநகர் அசன்சியோன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசன்சியோனில் மட்டும் 10,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் கால்நடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 48 மணி நேரத்தில் 600 மிமீ மழை பெய்துள்ளது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு 50 செ.மீ. உயரம் வரை இருந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

To Top