பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து 8 பேர் பலி, 4 பேர் பலத்த காயம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
அதற்குள் வேன் முழுவதும் தீப்பற்றியது. வேனுக்குள் இருந்தவர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். 4 பேர் ஜன்னல் வழியாக குதித்ததால் காயமின்றி தப்பினர்.
பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.