News

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முன்நாள் வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அம்பாறை காரைதீவு கடற்கரை காளிகோவில் அருகில் இன்று(17) மதியம் இடம்பெற்ற நிகழ்வில் இக்கருத்தினை முன்வைத்தார்

இந்த நிகழ்விலே காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் எஸ்.நேசராசா ,ஆ.பூவாலரெத்தினம் அவர்களும் கலந்து கொண்டு நினைவுச்சுடர் ஏற்றி அகவணக்கத்தில் ஈடுபட்டனர்

எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது

 

 

சுதந்த்திரம் கிடைத்து எழுபது ஆண்டுகளில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக கிழக்குமாகாணத்திலே சம்பூரிலே ஆரம்பிக்கபட்டு கொடூர யுத்தம் வாகரையிலே முடிந்தது .
அதே போல வட மாகாணத்திலே ஆரம்பிக்கபட்டு முள்ளிவாக்கலிலே பல பத்தாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கபட்டதுடன் எங்களுடைய தேசிய விடுதலைப்போரட்டம் கொடூரமாக நசுக்கபட்டு அழிக்கப்பட்டது.

 

 

இந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் ஐக்கிய நாடுகள் சபையினூடக நியமித்தகுழு நாற்பதாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யபட்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்கள். இது 2010 ம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழு 2011ம் ஆண்டு ஒரு நிபுணர் குழுவை நியமித்த அந்த குழு எழுபதாயிரத்திற்குமேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் காணமலாக்கபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். இந்த பின்னணியிலேதான் நடந்து முடிந்த போர்க்குற்றங்ளுக்கும் ,தமிழினப்படுகொலைகளுக்கும் நீதி கோரி நிற்கின்றோம்.

இதையொட்டி மே 12 தொடக்கம் மே 18 வரை தமிழினப்படுகொலை வாரமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.போர்குற்றங்களும் இனப்படுகொல்லைகளுக்கும் நீதி தேவை. இருபதாயிரத்திற்கு மேற்பட்டோர் இறுதி யுத்தத்தில் கட்டாயமாக காணாமலக்கப்பட்டிருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தில் வட்டுவாகலில் குடும்பம் குடும்பமாக சரணடைந்த பெண்கள்,கைக்குழந்தைகள் எங்கே என்ற கேள்வி எழுகின்றது .இதற்கு சரியான விடிவு வேண்டும்.

 

 

இந்த அடிப்படையிலேதான் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். எங்களுடைய இலங்கை படையினரால் ஆக்கிரமிக்கபட்டிருக்கும் கிராமங்களும் தமிழ் மக்களது தனிப்பட்ட காணிகளும் விடுபிக்கப்படவேண்டும் அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் மீழப்பெறவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மிகப்பெரிய இரண்டு கோரிக்கைகளை சர்வதேசத்திற்க்கு முன்வைக்கின்றோம்
இலங்கையில் அரசியல் தீர்வு இல்லை என்று ஆக்கபட்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களது அபிலாசைகளை தெரிந்து கொள்வதற்க்காக வடக்கு,கிழக்கு தமிழர் தாயக பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்ட வெளிநாட்டு நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை நடத்துவதற்க்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்புக்கொண்டும் அதை நாடர்த்த மாட்டோம் என்று கெளரவ சனாதிபதி அவர்களும், கெளரவ பிரதமர் அவர்களும்,
கெளரவ அமைச்சர்களும் தெட்ட தெளிவாக கூறியிருந்த காரணத்தால் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எங்களுடைய நீதியை பெற்றுத்தர வேண்டும் என நாங்கள் கோரிநிற்க்கின்றோம்

 

கொல்லபட்ட மக்களுக்கு நீதி நியாயம் வேண்டும் என்பதை காட்டுவதற்க்கும் அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்க்காகவும் இந்த தமிழின படுகொலை வாரத்தை அனுஷ்டித்து வருகின்றோம் . நாளை காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலுக்கு கொல்லபட்ட மக்களின் நீதிக்காக திரள்வோம் என தெரிவித்தார் .

Latest News

To Top