மொன்றியலில் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் ஜுலை மாதம் முதல் அதிகரிப்பு.

மொன்றியலில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
ரயில், பேருந்து என அனைத்து பொதுப் போக்குவரத்துகளுக்குமான கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன.
மெற்ரோ ரயில் சேவைக்கான 3.25 அமெரிக்க டொலர் என்ற குறைந்தபட்ச கட்டணம் 3.50 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் எதிர்வரும் காலத்தில் 2 வீதமான பணத்தை மேலதிகமாக செலுத்தவேண்டியுள்ளது.