News

யாழில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த சுமந்திரன் – மாவை

யாழ். பல்கலைக்கழக வளாகத்திலும், மாணவர் விடுதியிலும் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தீவிர சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள விடுதி என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

 

 

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தங்கியிருந்த விடுதிகளில் தமிழீழத்தின் வரைபடம், சினைப்பர் துப்பாக்கிக்குரிய தொலைநோக்கி, இராணுவச் சப்பாத்து என்பன  காணப்பட்டது என்ற குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 

 

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர், பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும்,  மாணவர்களின் கைது தொடர்பாக விசாரித்தமையுடன், கோப்பாய் பொலீஸ்நிலையத்துக்குச் சென்று கைதுசெய்யப்பட்ட மாணவர்களைப் பார்வையிட்டமையுடன், இது தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.   மாணவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top