Canada

ரொறன்ரோ பகுதியில் நபர் ஒருவர் கொலை! பொலிஸார் தீவிர விசாரணை

கனடாவின், ரொறன்ரோ பகுதியில் நள்ளிரவில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த கொலை சம்பவம், நேற்று டோவர் கோர்ட் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து,   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் 43-வயது நபர் வீட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் குறித்த இடத்தில் இருந்து தப்பி சென்ற நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருப்பினும், இதில் பாதிப்படைந்த நபர் தொடர்பிலான பெயர் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

 

Latest News

To Top