News

றிஷாட் பதியூதீனின் வீட்டில் தேடுதல் – கூரிய ஆயுதங்கள் சிக்கின!

 

மன்னார் – தாராபுரம் துர்கி நகர் பகுதியிலுள்ள அமைச்சர் றிஷாட் பதியூதீனின் வீட்டை பாதுகாப்பு படையினர் இன்று பகல் சோதனையிட்டனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பை வைத்திருந்ததாக அமைச்சர் பதியூதீன் மீது குற்றச்சாட்டு காணப்படுகின்றது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்து வருகின்றார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவர் மஸ்கட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாட்டில் இல்லாத நேரத்தில் அமைச்சர் பதியூதீனின் இல்லத்தை முப்படையினருடன் இணைந்து பொலிஸாரும் சோதனையிட்டிருக்கின்றனர். இந்த சோதனையின்போது எந்தவித சந்தேகத்திற்கிடமான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக அந்த வீட்டின் வளாகத்திலிந்து கூர்மையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top