Canada

வடக்கு ஒன்டாரியோ தீ விபத்தில் தாய் மற்றும் 4 குழந்தைகள் உயிரிழந்துள்னர்.

இக்கவலைக்குரிய விபத்தில் உயிரிழந்த பெண்மணி ஒரு single mother. இவர்க்கு ஐந்து பிள்ளைகள் . இச்சம்பவம் நடந்தன்று இவரது மூத்த மகள் வீட்டில் இல்லாததால் தாய் மற்றும் அவர் நான்கு பிள்ளைகளும்  தீவிபத்தில்  பலியாகினர். . இறந்த நான்கு பிள்ளைகளில் மூவர் தத்து பிள்ளைகளாம்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.  இன்று பிற்பகல்  வரை சம்பவ இடத்திற்கு விசாரணையாளர்கள் யாரும் வராததால் தீ விபரத்திற்கான காரணம் என்னவென்று எவ்வித தகவல்களும் சரியாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இச்சம்பவத்தால் thunder bayகு 600km வடக்கில் அமைந்துள்ள Kitchenuhmaykoosib Inninuwug First Nation னில் வசிக்கும்  1000 குடியிருப்பினரும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த குடும்பத்தாரின் இறுதிக்கிரிகைகளுக்கும்,  வெளியூரில் வசிக்கும் உறவினர்கள் கிரிகையில் பங்கெடுப்பதற்க்காவும் நிதிசேகரிக்க GoFundMe campaign அமைக்கப்பட்டுள்ளது. கீழ்காணும் இணைப்பில் நிதி கொடுக்க விரும்புவோர் நிதியை அளிக்கலாம்.
https://www.gofundme.com/f/tragic-fire-in-ki

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top