வின்ட்சர் பகுதியில் இரண்டு வாலிபர்களின் தாக்குதலால் நினைவிழந்த 14-வயது சிறுவன்!

வின்ட்சர் பகுதியை சேர்ந்த 14-வயது சிறுவனை இரண்டு வாலிபர் சேர்ந்து தாக்கியதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் உள்ளார்.
குறித்த, 14-வயது சிறுவன் (Jayden Trudell’s) தாக்கப்பட்டதாக அவருடைய தாயார் மருத்துவமனையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த இரண்டு வாலிபர்களையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில், இருவரும் நீதி மன்றத்தில் மே- 13 அன்று ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் தொடர்பில் மருத்துவமனையில் வெளியிடப்படும் ஆதாரங்களை கொண்டு குற்றவாளிகளுக்கு தணடனை விபரம் அறிவிக்கப்பட இருக்கிறது.
14-வயது Jayden Trudell சிறுவன் ஹெர்மன் உயர்நிலை பள்ளி (Herman High School) வளாகத்தில் இருந்து வெளியில் வரும் வேளையில், குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள சி.சி.டிவி காமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.