Canada

வின்னிபெக் கிராண்ட் பார்க்கில் இடம்பெற்ற கொலை! பொலிஸார் தீவிர வலைவீச்சு!

 

கனடாவின் வின்னிபெக் பகுதியில், இடம்பெற்ற கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவின் வின்னிபெக் பகுதியில், நேற்று காலை கிராண்ட் பார்க் டெய்லர் அவென்யூவின் 1000 தொகுதியில் குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதின் படி காலை 3:40-மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

 

 

இதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சம்பவம் இடத்தில் இருப்பதை கண்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், குறித்த நபர் சிகிக்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவமனையில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் 204-986-6508 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top