56 உடல் உறுப்புகளை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், அடையாளம் காணப்படாத 56 உடல் உறுப்புகள், கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தங்களது குடும்பத்தில் காணாமல் போன அல்லது, தேடப்பட்டு வருகின்ற நபர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இன்று (04) நடைபெற்றபோதே, பொலிஸ ஊடகப் பேச்சாளர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.