India

இலங்கையில் தற்கொலை குண்டுதாக்குதல்! கோவையில் சிக்கினார் முக்கிய சூத்திரதாரி

இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவையில் 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் சஹ்ரானுடன் நீண்டகாலமாக தொடர்பிலிருந்த முஹம்து அசாருதீன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.மேலும் 5 பேருக்கு நீதிமன்றத்தில்ஆஜராகுமாறும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.  கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டு தாக்குதலில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து, தேசிய தௌஹித் ஜமாத் என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டதுடன், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகளும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக இந்தியா இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

குறிப்பாக கோவையில் சிலருடன் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தது பேஸ்புக் தொடர்புகள் மூலம் அறிந்துகொண்டனர்.  அத்துடன், கோவையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் சில தடவை கோவை வந்து சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே, கோவையில் ஏழு இடங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.  இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோவையில் இளைஞர் முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்

அஸாருதீனை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து லெப்- டாப், டைரி, பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஏர் கன்னுக்கு (வான்துப்பாக்கி) பயன் படுத்தப்படும் 300 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டொப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட் டிஸ்க்குகள், ஒரு இண்டர்நெட் உபகரணம், 13 சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

இலங்கையை உலுக்கிய கோரச் சம்பவத்துக்கு தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப் பேற்றது. அந்த அமைப்புக்கு தலைவராக இருந்த சஹ்ரான் தொடர் குண்டு வெடிப்புகளின்போது தற்கொலை தீவிரவாதியாக மாறி உயிரிழந்தார்.

இதையடுத்து பயங்கரவாதியான சஹ்ரானுக்கு தமிழகத்திலிருந்து உதவிகள் கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக கோவையில் சிலருடன் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது பேஸ்புக் தொடர்புகள் மூலம் தெரிய வந்தது.

கோவையில் சஹ்ரானுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் சஹ்ரான் பல தடவைகள் கோவை வந்து சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தகவல்களை தொடர்ந்து இந்திய தேசிய விசாரணைக் குழு கோவையிலுள்ள சிலரை ஒரு மாதமாக தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர்களது செல்போன், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் தொடர்புகள் அனைத்தும் மிக ரகசியமாக பின்தொடரப்பட்டன. இதன்போது கோவையிலுள்ள 6 பேர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இருப்பதும் ஐ.எஸ். தீவிரவாத கொள்கைகளை பேஸ்புக் மூலம் பரப்பி வருவதும் உறுதிப்படுத்தப்பட்டது

Latest News

To Top