News

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 115  வருட பழமை வாய்ந்த தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து… போராடும் தீயணைப்பு வீரர்கள்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 115  வருட பழமை வாய்ந்த தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் மேற்கு பிலடெல்பியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

2.50 மணிக்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்தனர்.  100 க்கு மேற்பட் ட தீயணைப்பு படையினர் நீண்ட நேரமாக தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

இந்த சம்பவத்தில் காயம் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top