அவுஸ்திரேலியாவில் மொனாஸ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற நிசாலி பெரேரா என்ற யுவதி நேற்றைய முன்தினம் வியாழக்கிழமை பல்கலைகழகத்தில் இருந்து இரவு வீட்டிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்ட வேளை வேகமாக  வந்த கார் ஒன்றில் அடிப்பட்டு சுமார் 20 மீற்றர் தூரத்திற்கு வீசப்பட்டார்.

கிளேட்டனில் உள்ள சீனிக் பவுல்வர்டுக்கு அருகிலுள்ள வெலிங்டன் வீதியில்  அவர் வீதியை கடக்கி முற்பட்ட வேளை சாரதி காரை  நிறுத்தத் தவறிவியமையால் இவ்விபத்து  நேர்ந்துள்ளது என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி  கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அதில் ஒரு  பெண் விபத்து தொடர்பாக பொலிஸாரிடம் பேசுவது, மற்றும் அம்புலன்ஸ் சேவை வரும் காட்சியும்  பதிவாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனம் பின்னர் கிளேட்டனில் வடக்கு வீதியிலுள்ள ஒரு பழைய தேவாலயத்தில் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து சுமார் 700 மீற்றர் தொலைவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்குறித்த விபத்திற்கு முன்பாக கார் மிக வேகமாக வந்திருக்கலாம் என பொலிஸாரால் நம்பப்படுகிறது.

விபத்து தொடர்பான  விசாரணைக்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். அதாவது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மற்றும் விபத்து காட்சிகளின் காணொளிகள் உள்ள எவரும் பொலிஸாரை  தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.