News

இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் புதிய யோசனை

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள், ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில், இலங்கைக்கு எதிராக புதிய யோசனையை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக உயர்மட்ட ராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் விசேடக் கூட்டத் தொடரில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. ல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படலில்லை எனவும் பொறுப்புக் கூறல் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் செல்வதாகவும் அந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், இலங்கைக்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு ஆரம்பமாக இருக்கும் என இந்த யோசனையை கருத முடியும் என ராஜதந்திர உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top