News

உறவுகளைத் தேடிய நிலையில், உயிர்துறந்த உறவுகளினுடைய, விபரம் அடங்கிய நூல் நாளை வெளியீடு.

நாளைய நாள் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினத்தை முன்னிட்டு, வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இந் நிலையில் இந்த நாளைய ஆர்ப்பாட்டத்தில், இதுவரைகாலமும் உறவுகளைத் தேடிய நிலையில் உயிரிழந்த உறவுகளின் விபரங்கள் அடங்கிய நூலும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளதாக முல்லை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடகசந்திப்பொன்றை இன்றைய தினம் ஏற்பாடுசெய்து அதில் ருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாளைய விசேடமான இந்த போராட்டதில், 900நாட்களை கடந்த இந்த சூழலில் போர்ட்டத்தில் ஈடுபட்ட அப்பாக்கள் மற்றும் அம்மாக்கள் வடகிழக்கில் மொத்தமாக எட்டு மாவட்டங்களிலுமாக மொத்தமாக 42பேரிற்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முல்லை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள், தமது உறவினர்களைத் தேடிக்கொண்டிருக்கையில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளாக, தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரியின் தரவின்படி, தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராசா விஜயலட்சுமி, 2019.01.08 அன்று உயிரிழந்தார், கைவேலியைச் சேர்ந்த கோணமலை பொன்னம்பலம்
22.11.2017 அன்று உயிரிழந்தார், சிலாவத்தைபகுதியைச் சேர்ந்த தேவசகாயம் மரியமலர்
2018.07.13 அன்று உயிரிழந்தார், கைவேலியைச் சேர்ந்த ஜினதாச பியதாச 2017.10.11 அன்று உயிரிழந்தார், விசுவமடுப் பகுதியைச் சேர்ந்த அன்ரன் அல்பிறட் 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார், கவேலி பகுதியைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை ஆரோக்கியநாதன் 2017ஆம் ஆண்டு உயிரிழந்தார், இரணப்பாலைப் பகுதியைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா, 2019.07.23 அன்று உயிரிழந்தார், கருநாட்டுக்கேணி பகுதியைசச்சேர்ந்த சபாபதிப்பிள்ளை தனபாலசுநரம் 2017.11.21 அன்று உயிரிழந்தார், பொன்னுத்துரை – திருஞானசம்பந்தர் 2019.08.22 அன்று உயிரிழந்தார். இவர்களுடன் இன்னும் இருவர் உட்பட மொத்தமாக இவ்வாறு 12பேர் காணாமல் ஆக்கப்பட்டவரது உறவினர் தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும்போது உயிரிழந்துள்ளனர். என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை வடக்கில் ஓமந்தையில் இடம்பெறும் போராட்டத்திலும், கிழக்கில் கல் முனையில்இடம்பெறும் போராட்டத்திலும் புத்தகமாக அவர்களது விபரங்களை வெளியிடுகின்றோம் என்றார்.

இந்த புத்தகங்களை வெளியிடுதற்கு, சர்வதேசத்திலும் ஏழு நாடுகளில் கேட்டிருக்கின்றோம். அங்கும் இந்த புத்தகங்கள் வெளியிடப்படும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top