ஊடகவியலாளர்கள் கொலை , சுற்றுலாப்பயணிகள் கற்பழிப்பு மற்றும் வெள்ளை வான் கடத்தல்களை மறந்து விடமுடியாது எனத் தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று பொதுஜன பெரமுனவின் புகழ்பாடுபவர்கள். கடந்த அரசாங்கத்தின் முறைக்கேடுகளை மீள  நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குடும்ப ஆட்சியினை இல்லாதொழித்து  ஜனநாயகம் மிக்க அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களின் அரசியல் தீர்வாக காணப்பட்டது. இதனை இலக்காக கொண்டே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஆட்சியினை கைப்பற்றி ஜனநாயகத்தை  அனைவருக்கும் பொதுவுடமையாக்கிய ஐக்கிய தேசிய கட்சி மீண்டும்  மஹிந்த ராஜபக்ஷவிடம்  ஒருபோதும் ஆட்சியினை  ஒப்படைக்காது.  நிச்சயம் மீண்டுமொரு அரசியல் பின்னடைவினை   பொதுஜன பெரமுன  எதிர்க்கொள்ளும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.