News

எரிமலை வெடித்ததால் வெளியான லாவா ராட்சத படிகக்கற்களாக மாறி பசிபிக் கடலில் மிதக்கும் காட்சிகள்!

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பெரிய ராட்சத எரிமலையின் அளவு, அமெரிக்காவின் மன்ஹாட்டன், வாஷிங்டன் நகரங்களுடனும் 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

டோங்காவின் வாவா தீவுகளிலிருந்து தென் பசிபிக் பெருங்கடல் வழியாக பிஜி சென்று கொண்டிருந்த பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா, நடுகடலில் சிறிய பளிங்கு போலவும் கூடைப்பந்து போலவும் பாறைகள் மிதப்பதை பார்த்துள்ளனர்.

பல மைல் தூரத்துக்கு பரவியிருந்த அவற்றில் சிலவற்றை சேகரித்து, படம்பிடித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கடலில் உள்ள எரிமலை வெடிக்கும்போது வெளியாகும் வாயுகள் நிறைந்த சூடான லாவா, கடல்நீரால் குளிர்விக்கப்பட்டு பியூமிஸை உருவாக்குகிறது.

இந்த பியூமிஸ் படலம் பசிபிக் கடலில் பல மைல் தூரத்துக்கு பரவிக்கிடப்பதாக கடல் பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா கூறுகின்றனர். மேலும் அதன் பரப்பளவை மன்ஹாட்டன், வாஷிங்டன், 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களின் பரப்பளவுடனும் ஒப்பிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top