Canada

கனடாவில் 11-வது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்ளும் 17-வயது சிறுவன்!

கனடாவில், இந்த ஆண்டில் 11-வது கொலை குற்றச்சாட்டினை 17-வயது சிறுவன் ஒருவன் எதிர்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை 5:10 மணிக்கு ஃபேர்லைட் டிரைவின் 3800 தொகுதியில் இருந்து அழைப்பு வந்தது.

 

 

இதில், தாக்குதலுக்கு உள்ளான 22-வயது நபரை மீட்டு பொலிஸார் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, இது தொடர்பில் 17-வயது சிறுவனை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

இதில், காயமுற்ற நபர் உயிரிழந்த நிலையில் குறித்த நபர் வரும் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top