Canada

கனேடிய இராணுவ சிப்பாய் சேவையில் இருந்து இடைநீக்கம்! மாயமானதாக பொலிஸாரிடம் முறைப்பாடு

வெள்ளை மேலாதிக்க வலையமைப்பான நியோ-நாஜி குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கனேடிய இராணுவ சிப்பாய் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன சிப்பாயின் தந்தை பட்ரிக் மத்யூஸ் மனிடோபா பொலிஸாரிடம் அவர் காணாமல் போயுள்ளமை குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.  கடைசியாக கடந்த சனிக்கிழமை, மத்யூஸை தான் கண்டதாக அவர் தந்தை தெரிவித்துள்ளார். நியோ-நாஜி குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயதான பேட்ரிக் மத்யூஸ் என்ற சிப்பாய் பணியில் இருந்து இடைவிலக்கப்பட்டார்.

கனேடிய தேசிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கடந்த புதன்கிழமை அவர் இடைநீக்கப்பட்ட தகவலை அறிவித்தார். குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வெள்ளை மேலாதிக்க வலையமைப்பான தி பேஸுக்கு மத்யூஸ் ஆட்சேர்ப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை வின்னிபெக் ஃப்ரீ பிரஸ் கடந்த வாரம் முதலில் வெளியிட்டது. இச்செய்தியைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19 ஆம் திகதியன்று பியூஸ்ஜூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கனேடியப் பொலிஸார் மத்யூஸை கைது செய்தனர்.

அங்கு மத்யூஸ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இவ்வாறான நிலையில் குற்றஞ்சாட்ட படைச் சிப்பாய் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. மத்யூஸ் காணாமல் போயுள்ளதையடுத்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் அவரது குடும்பத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top