News

தாயகத்தில் காணாமல் போன உறவுகளுக்காக பிரான்சில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று பிரான்சில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் உரிய தீர்வு வழங்கவில்லை.

 

 

 

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

 

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

 

 

இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top