News

பரபரப்புக்கு மத்தியில் மைத்திரி – சந்திரிகா சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையே மிகவும் தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்திருந்ததாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் எதிர்காலம், உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவுக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

எனினும், அது வெற்றிகரமாக இடம்பெறாதிருக்கின்ற சூழ்நிலை குறித்த இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான சந்திப்பை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, 2015ஆம் ஆண்டில் தைரியமாக எடுத்த துணிச்சல்மிகு தீர்மானங்களை மீண்டும் எடுக்கும்படி வலியுறுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top