தனியார் பல்கலைக்கழக சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களால் இன்று  கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டாதால் ஆர்ப்பாட்டக்கார்களை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

 

 

கொழும்பு – புறக்கோட்டை , டெக்னிகல் சந்தியில் இன்றைய தினம் பல்கலைக்கழக மானவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அங்கிருந்து பேரணியாக லோட்டஸ் சுற்றுவட்டார்த்தைச் சென்றடைந்தனர்.

 

 

இதனால் டெக்னிகல் சந்தி தொடக்கம் லோட்டஸ் சுற்று வட்டாரம் வரையான வீதிகளில் சில மணித்தியாலங்களுக்கு பாரிய வாகன நெரிசல் நிலவியது. இதன் காரணமாகவே ஆர்ப்பாட்டக்கார்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

எனினும் லோட்டஸ் சுற்று வட்டாரத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முற்பட்டமையின் காரணமாகவே கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.