News

மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தினை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றையதினம் வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச காணாமல் போனோர் தினமான ஒகஸ்ட் 30ஆம் திகதி அன்று வடக்கு, கிழக்கு இணைந்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பகுதியிலும் வவுனியா மாவட்டத்தில் பன்றிகெய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை சோதனை சாவடியில் முடிவடையும். இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், சமூக சேவை ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரும் எமது போராட்டத்திற்கு வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

விமர்சனம் செய்யும் போராட்டமாக இதை யாரும் கொச்சைப்படுத்தாமல், எமது போராட்டத்திற்கு வலுவூட்டி எமது உறவுகளிற்கான நீதிக்காக தேடி செல்லும் போராட்டத்தினை மிகவும் உணர்வு பூர்வமான முறையில் எடுத்துச்செல்ல அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top